Article
Add this post to favorites

உங்கள் குழந்தைக்கான பள்ளிப் பருவத்துக்கு முந்தையஊட்டச்சத்து

இந்தியர்களுக்கெனபரிந்துரைக்கப்பட்ட உணவு ஏற்பளவுகளின்படி, 1-3 வயதுள்ள ஒரு குழந்தை நாளொன்றுக்கு சுமார் 1,060 கிலோ கலோரியும் மற்றும ¢4-6 வயதுள்ள ஒரு குழந்தை நாளொன்றுக்கு சுமார் 1,350 கிலோ கலோரியும் உண்ண வேண்டும்.
 

2 mins  read

ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கென உங்கள் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து செறிந்த உணவுகள் தேவைப்படுகையில், அவன் / அவளின் வயிறு மிகச்சிறியதாக உள்ளது. எனவே, பெரியவர்களைப் போல உங்கள் குழந்தையை நடத்தக்கூடாது மற்றும் நீங்கள் சாப்பிடும் அளவு அவன் / அவளும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உணவின் அளவை நீங்கள் அதிகரிக்க முடியாது என்பதால், உங்கள் குழந்தையின் உணவை ஊட்டச்சத்து செறிந்ததாக ஆக்கி, உணவின் தரத்தை அதிகரிக்க முயற்சியுங்கள்.

தானியங்கள் & கம்பு

1-3 வயது குழந்தைகளுக்கென நாளொன்றுக்கு 2 கப் தானியங்கள் மற்றும் கம்பை சேர்க்கவும் மற்றும் 4-6 வயது குழந்தைகளுக்கென நாளொன்றுக்கு 4 கப் தானியங்கள் மற்றும் கம்பை சேர்க்கவும்.
அவற்றில் புரோட்டின், கால்ஷியம், இரும்பு மற்றும் B-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஆகியவை செறிந்துள்ளன. துருவிய கேரட்டுகள், நறுக்கிய வெங்காயங்கள், குடை மிளகாய், பீட்ரூட் ஆகியவற்றை உப்புமா, சப்பாத்தி, தோசை அல்லது இட்லியுடன் சேர்க்கலாம். இது மதிய உணவை அதிக வண்ணமயமானதாகவும், ஊட்டச்சத்து செறிந்ததாகவும் ஆக்குகிறது.

பருப்பு

நாளொன்றுக்கு குறைந்தது ஒரு கப் பருப்பையாவது சேர்க்கவும்.
சேன்ட்விச்கள், ஒரு கிண்ணம் ஓட்ஸ், கட்லெட்டுகள் அல்லது வெஜிடபிள் உப்புமா, தோசை, இட்லி அல்லது பரோட்டா போன்ற வழக்கமான காலை உணவு பதார்த்தங்களில் கொஞ்சம் முளைவிட்ட பருப்புக்களை சேர்த்து, உங்கள் குழந்தையின் உணவை ஊட்டச்சத்து செறிந்ததாக ஆக்குங்கள்.

காய்கறிகள்

 

1-3 வயது குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு குறைந்தது 2 கப், 4-6 வயது குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 3 கப் காய்கறிகளை சேர்க்கவும்.
- அவற்றில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் செறிந்துள்ளன
- பச்சை இலை காய்கறிகளை முட்டைப் பொரியல், சேன்ட்விச்கள், கிச்சடி, வெஜிடபிள் புலாவ் அல்லது பிற ஸ்நேக்ஸ்களில் சேர்க்கவும்.
- துருவிய கேரட்டுகள், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்குகள், பீன்ஸ் அல்லது பட்டாணியை ராகி அல்லது அரிசி ரொட்டி, உப்புமா, சூப்கள், வறுத்த பண்டங்கள் போன்றவற்றில் சேர்க்கவும்.

பழங்கள்

குறைந்தது 1 கிண்ணம் பழங்களை சேர்க்கவும்.
- சிறு துண்டுகளாக பழங்களை நறுக்கவும் அல்லது 100% பழச்சாறு வடிவில் (தண்ணீர், சர்க்கரை போன்றவற்றை சேர்க்காமல் முழு பழத்தின் சாப்பிடக்கூடிய பகுதியை ஜூஸ் தயாரிக்க உபயோகிக்கவும்).
- பழ மில்க்ஷேக், ஃப்ரூட் சாலட் அல்லது பழ கஸ்டர்ட் போன்றவை பிற தேர்வுகளாகும்.

பால் மற்றும் பால் பொருட்கள்

எப்பொழுதெல்லாம் சாத்தியமோ குறைந்தது 500 மிலி. பால் மற்றும் பால் பொருட்களை சேர்க்கவும்.
- பால் உங்கள் குழந்தைக்கு நல்ல - தரமான புரோட்டின்கள் மற்றும் கொழுப்பை வழங்குகிறது. ஒரு கை நிறைந்த பழங்கள் மற்றும் உலர் கொட்டைகளை சேர்த்து பாலை அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக ஆக்குங்கள்.
- பழ மில்க்ஷேக் உங்கள் குழந்தையின் உணவுக்கு ஒரு ஆரோக்கியமான சேர்க்கையாகும்.
- அரிசி, கட்லெட்கள், சப்பாத்தி அல்லது தோசை மீது சீஸை துருவி சேருங்கள்.
- காய்கறி கிரேவிக்கள் அல்லது அரிசி உணவுகளில் பனீர் துண்டுகள் அல்லது துருவிய பனீரை சேர்க்கவும்.

முட்டைகள், இறைச்சி, கோழி அல்லது மீன்

நீங்கள் அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், ஒரு பகுதி (30 கிராம்) பருப்புக்கு பதிலாக முட்டையின் ஒரு பகுதி (50 கிராம்), இறைச்சி, சிக்கன் அல்லது மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- முட்டைப் பொரியலுடன் பல வகை காய்கறிகளை சேர்க்கவும்.
- கொஞ்சம் கோழி அல்லது ஆட்டிறைச்சி துண்டுகளை கட்லெட் அல்லது ஃப்ரைட் ரைஸ§டன் சேர்க்கவும்.

பின்வருபவற்றை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும் :

- ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் பிற பொரித்த உணவுகள்
- பழ -சுவை பானங்கள்
- உப்பு அதிகமாக உள்ள உணவுகள் உ.ம். வறுவல்கள்

உங்கள் குழந்தைக்கு கொடுக்குமுன், தயாரிப்பு லேபிள்களை படித்துப் பார்ப்பதை உறுதிபடுத்தவும்.

free-sample-product-range-banner

FREE SAMPLE

Please fill the form to request for a free sample