Article
Add this post to favorites

உங்கள் குழந்தைக்கானவளர்ச்சி மைல்கல்கள்

மேம்பாட்டு முன்னேற்றங்கள் என்பது உங்களுடைய குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதில் எவ்வாறு கற்கிறது, விளையாடுகிறது, பேசுகிறது அல்லது செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது. குழந்தையின் ஒட்டுமொத்த நலனை மதிப்பிடுவதற்கு முக்கியமான அறிகுறிகளைத் தருகிறது.
 

4 mins  read

ஒரு குறிப்பிட்ட வயதில் உங்கள் குழந்தை எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும், விளையாட வேண்டும், பேச வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதை வளர்ச்சி மைல்கற்கள் குறிப்பிடுகின்றன மற்றும் அவன்/அவளது ஒட்டுமொத்த நலத்தை மதிப்பீடு செய்ய முக்கிய தடயங்களைத் தருகின்றன. உங்கள் குழந்தையின் மைல்கற்களை மதிப்பீடு செய்ய, கீழே தரப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலை கவனிக்கவும்.

Age 2 Years
சமூக/
உணர்ச்சி
மைல்கற்கள்
மொழி/
தொடர்பு
மைல்கற்கள்
கற்றல்,
யோசித்தல் மற்றும்
பிரச்சினை தீர்க்கும்
மைல்கற்கள்
உடல்
வளர்ச்சி
மைல்கற்கள்
  • மற்றவர்களைக் காப்பி அடிக்கிறது
  • மற்ற குழந்தைகளுடன் இருப்பது குறித்துப் பரவசம் அடைகிறது
  • அதிகளவில் சுதந்திரத்தைக் காட்டுகிறது
  • பணிய மறுக்கும் பழக்கத்தைக் காட்டுகிறது
  • பெயர் சொல்லும்போது பொருட்களை அல்லது படங்களை சுட்டிக் காட்டுகிறது
  • பரிச்சயமான நபர்கள் மற்றும் உடம்பு பாகங்களின் பெயர்களை அறிந்திருக்கிறது
  • 2-4 சொற்களில் வாக்கியத்தைக் கூற முடிகிறது
  • எளிய கட்டளைகளைப் பின்பற்ற முடிகிறது
  • ஒட்டுக்கேட்கும் உரையாடல்களைத் திரும்பச் சொல்கிறது
  • 2-3 படுகைக்கு உள்ளே மறைக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கூட கண்டுபிடித்து விடுகிறது
  • வடிவங்கள் மற்றும் நிறங்களுக்கு இடையே வித்தியாசங்களைக் காட்டத் தொடங்கி, பிறகு அவற்றை ஒன்றில் இருந்து ஒன்றை பிரித்துக் காட்டுகிறது
  • பழக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து வாக்கியங்களையும், பாடல்களையும் நிறைவு செய்கிறது
  • எளிய நம்பக்கூடிய விளையாட்டுக்களை விளையாடுகிறது
  • நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பிளாக்குகளைக் கொண்டு டவர்களைக் கட்ட முடியும்
  • ஒன்றை விட இன்னொரு கையை அதிகம் பயன்படுத்தக்கூடும்
  • உனது பொம்மைகளை எடுத்து, அவற்றைப் பெட்டியில் போடு" என்பன போன்ற இரண்டு கட்ட கட்டளைகளைப் பின்பற்ற முடிகிறது
  • பூனை, பறவை, அல்லது நாய் என்று பிக்சர் புத்தகத்தில் இருந்து பொருட்களின் பெயர்களைக் கூறுகிறது
  • உதவியின்றி ஃபர்னிச்சர்கள் மீது _ஏறி இறங்க முடிகிறது
  • உதவியின்றி மாடிப்படிகளில் ஏறி இறங்க முடியும்
  • மேலே பந்தை எறிய முடிகிறது
  • நேர் கோடுகளையும், வட்டங்களையும் போட முடிகிறது அல்லது காப்பியடிக்க முடிகிறது
Age 3 Years
சமூக/
உணர்ச்சி
மைல்கற்கள்
மொழி/
தொடர்பு
மைல்கற்கள்
கற்றல்,
யோசித்தல் மற்றும்
பிரச்சினை தீர்க்கும்
மைல்கற்கள்
உடல்
வளர்ச்சி
மைல்கற்கள்
  • பிறரை பார்த்து அவர்களைப் போலவே செய்யும்
  • தூண்டி விடாமலேயே நண்பர்களுடன் பாசமாக இருக்கும்
  • அழும் நண்பர்கள் மீது அக்கறை காட்டும்
  • விளையாட்டுக்களில் முறை எடுத்துக் கொள்ளும் மற்றும் தனக்கு சொந்தம் என்ற கருத்தை புரிந்து கொள்ளும் - உ.ம். "என்னுடையது", மற்றும் "அவனுடையது" அல்லது "அவளுடையது"
  • உணர்ச்சிகளில் வித்தியாசத்தை காட்டுகிறது
  • அம்மா, அப்பாவிடமிருந்து பிரிவதால் பதட்டம் இருப்பதில்லை
  • வழக்கமான செயல்களில் முக்கிய மாற்றங்களுடன் வருத்தமடையலாம்
  • ஆடைகளை போட்டுக் கொள்ளவும், கழற்றவும் முடியும்
  • 2-3 வரி கட்டளைகளை பின்பற்றும்
  • மிகவும் பரிச்சயமான பொருட்களின் பெயரை குறிப்பிடும்
  • "உள்ளே", "மேலே" மற்றும் "கீழே" போன்ற வார்த்தைகளை புரிந்து கொள்ளும்
  • முதல் பெயர், வயது, மற்றும் பாலினத்தை கூறும்
  • ஒரு நண்பனின் பெயரை சொல்லும்
  • "நான்", "என்னை", "நாங்கள்", மற்றும் "நீங்கள்" போன்ற வார்த்தைகள் மற்றும் சில பன்மைகளை கூறும் (கார்கள், நாய்கள் மற்றும் பூனைகள்)
  • 2-3 வாக்கியங்களை உபயோகித்து தொடர்பு படுத்தும்
  • பட்டன்கள், லீவர்ஸ் மற்றும் நகரும் பாகங்களுடன் கூடிய பொம்மைகளை இயக்கும்
  • பொம்மைகள் மற்றும் பொருட்களுடன் மேக் - பிலீவ் விளையாடும்
  • 3-4 துண்டு புதிர்களை சரியாக பொருத்தும்
  • பென்சில் அல்லது கிரேயானுடன் ஒரு வட்டத்தை படியெடுக்கும்
  • புத்தக பக்கங்களை ஒரு நேரத்தில் ஒன்றாக திருப்பும்
  • ஆறு பிளாக்குகளுக்கும் அதிகமான ஒரு கோபுரத்தை கட்ட முடியும்
  • ஜாடி மூடிகளை திருகவும், கழட்டவும் செய்யும் அல்லது கதவு கைப்பிடிகளை திருப்பும்
  • நன்றாக ஓடும் மற்றும் ஏறும்
  • ஒரு மூன்று சக்கர சைக்கிளை பெடல் செய்யும்
  • ஒவ்வொரு படியிலும் ஒரு அடி வைத்து, படிக்கட்டுகளை உபயோகிக்கும்
Age 4 Years
சமூக/
உணர்ச்சி
மைல்கற்கள்
மொழி/
தொடர்பு
மைல்கற்கள்
கற்றல்,
யோசித்தல் மற்றும்
பிரச்சினை தீர்க்கும்
மைல்கற்கள்
உடல்
வளர்ச்சி
மைல்கற்கள்
  • புதிய செயல்களில் ஈடுபட்டு மகிழ்கிறது
  • பாத்திர மேற்று நடிக்கும் விளையாட்டுக்களை விளையாடி மகிழும்
  • அசலைப் போன்றே செய்யும் சில நடவடிக்கைகளில் ஈடுபடும். ஆனால் பெரும்பாலும் அசல் மற்றும் அசல் போலவே நம்பும்படியாக செய்யப்பட்டவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை சொல்ல இயலாது
  • மற்ற குழந்தைகளுடன் ஒத்துழைக்கிறது மற்றும் தனக்குத் தானே விளையாடிக் கொள்ளாமல், அவர்களுடன் விளையாட விரும்புகிறது
  • அவன்/அவளின் விருப்பங்கள் மற்றும் வெறுப்புக்களைப் பற்றி பேசுவர்
  • அடிப்படை இலக்கண விதிகளை அறிகிறது. உதாரணமாக, "அவன்" மற்றும் "அவள்" போன்ற வார்த்தைகளை சரியாக உபயோகிக்கிறது
  • நினைவில் உள்ள ஒரு பாடலையோ அல்லது ரைம்களையோ பாட முடியும்
  • கதைகளை சொல்லும்
  • முதல் மற்றும் கடைசி பெயரை கூறும்
  • சில நிறங்கள் மற்றும் எண்களை கூறும்
  • எண்களை எப்படி எண்ணுவது என்பதைத் தெரிந்து வைத்துள்ளது
  • நேரம் பற்றிய கருத்தை புரிந்து கொள்ளத் தொடங்கும்
  • ஒரு கதையின் சிலபகுதிகளை நினைவில் வைத்துக் கொள்ளும்
  • "ஒரே மாதிரி" மற்றும் "வித்தியாசமான" என்பதைப் புரிந்து வைத்திருக்கிறது
  • சில பெரிய எழுத்துக்களை எழுத தொடங்குகிறது
  • போர்டு அல்லது கார்டு கேம்களை விளையாடத் தொடங்கும்
  • ஒரு காலை தூக்கி, இரண்டு நொடிகள் வரை நிற்க முடியும்
  • நொண்டியடிக்க முடியும்
  • பெரும்பாலான நேரங்களில் துள்ளிக்குதிக்கும் பந்தை பிடிக்கும்
  • அவன்/அவளது சொந்த உணவை பிசைய முடியும்
Age 5 Years
சமூக/
உணர்ச்சி
மைல்கற்கள்
மொழி/
தொடர்பு
மைல்கற்கள்
கற்றல்,
யோசித்தல் மற்றும்
பிரச்சினை தீர்க்கும்
மைல்கற்கள்
உடல்
வளர்ச்சி
மைல்கற்கள்
  • நண்பர்களை மகிழ்விக்கவும் மற்றும் அவர்களைப் போலவே இருக்கவும் விரும்புகிறது
  • பெரும்பாலான நேரங்களில் விதிகளை ஒத்துக் கொள்கிறது
  • பாட, நடனமாடமற்றும் _நடக்க பிடிக்கும்
  • அசல் மற்றும் நம்பும்படியாக இருப்பவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை _அறிந்து கொள்ளும்
  • அதிக சுதந்திரத்தை காண்பிக்கும் (பக்கத்திலேயே எங்கேனும் சென்று, தானாகவே விளையாடும்
  • சில நேரங்களில் பிடிவாதம் பிடிக்கும், சில நேரங்களில் ஒத்துழைக்கும்
  • தௌிவாக பேச முடியும்
  • முழு சொற்றொடர்களை உபயோகித்து ஒரு எளிய கதையை சொல்லும்.
  • எதிர்கால வினைச்சொல்லை உபயோகிக்கும். உதாரணமாக, "அப்பா இங்கு வருவார்‌"
  • பெயர் மற்றும் முகவரியை கூற முடியும்
  • 10 அல்லது அதிக எண்களை எண்ண முடியும்
  • சில எழுத்துக்கள் அல்லது எண்களை பார்த்து அவ்வாறே எழுதும்
  • முக்கோணம் மற்றும் பிற வடிவங்களைப் பார்த்து வரையும்
  • தினந்தோறும் உபயோகிப்பவற்றை பற்றி தெரிந்து கொள்கிறது
  • 10 நொடிகள் அல்லது அதற்கும் கூடுதலாக ஒரு காலில் நிற்க முடியும்
  • நொண்டியடிக்கும் மற்றும் குதிக்கக் கூட செய்யும்
  • ஸ்பூனை உபயோகிக்க தெரிந்து கொள்ளும்
  • அவன்/அவளாகவே டாய்லெட்டை உபயோகிக்கத் _தொடங்குவர்
  • ஊஞ்சல் ஆடும் மற்றும் மேலே ஏற கற்றுக் கொள்ளும்

பள்ளி போவதற்கு முந்தைய வயது குழந்தைகளுக்கு, வாழ்க்கையில் இந்தக்கட்டத்தில், உயர் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் உரிய நேரத்தில் மைல்கற்களை எட்டுதல் போன்றவை சமச்சீரான ஊட்டச்சத்தைப் பொறுத்தது. _எனவே குழந்தைகள் இந்த வளர்ச்சி மைல்கற்களை எட்டுவதில் ஏதேனும் தாமதம் உண்டாவதை தவிர்க்க, அவர்களின் சிறுவயிற்றுக்குள் போதுமான அளவு ஊட்டச்சத்து செறிந்த உணவு போவதை உறுதிபடுத்தவும்.

free-sample-product-range-banner

FREE SAMPLE

Please fill the form to request for a free sample